உடன்குடி, மார்ச் 4: குலசேகரன்பட்டினம் அருகே மாதவன்குறிச்சியில் உள்ள உடையார்ராஜா சுவாமி கோயிலில் கடந்த 2ம் தேதி அதிகாலை மர்மநபர் கேட் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கிருந்த சூலாயுதத்தால் இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றவர் உண்டியலை உடைத்து பணம், மற்றும் கோயிலினுள் பீரோவை உடைத்து அதிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் சிசிடிவி காமிராவில் பதிவான மர்மநபரின் உருவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தாண்டவன்காடு வீரசங்கிலி மாடன் கோயில், பெருமாள் கோயிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குலசை அருகே கோயிலில் கொள்ளை
0