நாகர்கோவில், ஜூன் 16: குலசேகரம் மார்க்கெட்டில் 26 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். குலசேகரம் மார்க்கெட் பகுதியில் எஸ்.ஐ. சரவணக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில், அந்த பகுதியில் நின்ற குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜன் (50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடந்த சோதனையில் அவர் திருட்டு மது விற்பதற்காக 26 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைதான ராஜன், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.