குலசேகரம், ஆக. 18: குலசேகரம் அருகே மூவாற்றுமுகம் தோட்டவரம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (47). பொன்மனை பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். வின்சென்டுக்கு திருமணமாகி மனைவி பிந்து (45), 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் வேலை முடிந்து அதே பகுதியில் உள்ள ஓடையில் குளிப்பதற்காக சென்றார். ஆனால் திடீரென அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குலசேகரம் போலீசார் விரைந்து சென்று வின்சென்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிந்து அளித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசேகரம் அருகே பரிதாபம் நீரில் மூழ்கி டிரைவர் பலி
previous post