உடன்குடி, ஆக. 22: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.21 லட்சம் வசூலானது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நிரந்தர உண்டியல்கள் 18 உள்ளன. ஆடிக்கொடையை முன்னிட்டு 10 தற்காலிக உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த உண்டியல்கள், தென்காசி உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் ரூ.21 லட்சத்து 41 ஆயிரத்து 220 ரூபாய் ரொக்கம், தங்கம் 31 கிராம் 300 மில்லி கிராம், வெள்ளி 449 கிராம் 300 மில்லி கிராம் இருந்தது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோயில் சூப்பிரெண்டு வெங்கடேஸ்வரி, அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.21 லட்சம்
previous post