உடன்குடி, ஆக. 21: குலசேகரன்பட்டினத்தில் கோயில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். குலசேகரன்பட்டினம் மெயின் ரோட்டை சேர்ந்த சண்முகம் (45). இவர், பிரசித்திப் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் நிர்வாக அதிகாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், சண்முகத்தை தாக்கி அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர். பலத்த வெட்டுக் காயமடைந்த சண்முகத்தை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசேகரன்பட்டினம் கோயில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு
previous post