தென்காசி, ஜூலை 1: குற்றாலத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்தபோதும் மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. மாலையில் சிறிது தூரல் விழுந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் வரிசையின்றி குளித்து மகிழ்ந்தனர். சீசன் காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலத்தில் இந்த ஆண்டு மே மாத மத்தியிலேயே தண்ணீர் வரத்து துவங்கியது. தற்போது வரை சீசன் நன்றாக உள்ளது. அனைத்து அருவிகளிலும் குறைவின்றி தண்ணீர் விழுகிறது. அவ்வப்போது சாரலும், இடையிடையே பலத்த மழையும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பதுமாக உள்ளது. கடந்த மூன்று தினங்களாக பகல் வேலைகளில் மதியம் வரை லேசான வெயில் காணப்படுகிறது. மதியத்திற்கு பிறகு சிறிது மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவுகிறது. மாலையில் இதமான தென்றல் காற்று வீசுகிறது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக வருகிறது. தற்போது நான்கு தினங்களாக அருவிகளில் தொடர்ந்து தடையில்லாமல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றAAனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று நன்றாக இருந்த போதும் கடந்த சனி ஞாயிறு விடுமுறை தின கூட்டத்துடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுவதால் வரிசையின்றி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.
குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு
0