தென்காசி, மே 24: குற்றாலம் மெயினருவி பாதுகாப்பு வளைவு மற்றும் அருவி பகுதியில் ரூ.38 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குற்றாலம் மெயினருவியில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவு சேதமடைந்தது. மேலும் பெண்கள் பகுதியில் இருந்து வடக்கு சன்னதி நோக்கி செல்லும் பெண்கள் நடைபாதையும் சேதமடைந்தது. தடுப்பு கம்பிகள் இடைவெளி வழியாக வெள்ள சமயங்களில் வயதான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆற்றில் விழும் அபாயம் இருந்தது. இதையடுத்து இவற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் ரூ.20 லட்சம் நிதி மற்றும் பேரூராட்சி பொது நிதி ரூ.18 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்து வடக்கு சன்னதி பஜார் செல்லும் பெண்கள் நடைபாதையானது தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு நிரந்தரமாக தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது. மேலும் மெயினருவி பாதுகாப்பு வளைவில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் வகையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சாரல் பெய்ய துவங்கி விட்டதால் மழையோடு, மழையாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றாலம் மெயினருவியில் ரூ.38 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு வளைவு, நடைபாதை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
0
previous post