சிவகாசி, ஆக.2: குற்றாலம் சென்று திரும்பிய போது வேன் கவிழ்ந்து அருப்புக்கோட்டையை சேர்ந்த 6 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் குமார்(40). இவர் அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் வேனில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றார். அருப்புக்கோட்டை காந்திநகரை சேர்ந்த பாலாஜி வேனை ஓட்டி சென்றார்.
சுற்றுலா முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர். திருவில்லிபுத்துார் வழியாக எரிச்சநத்தம் விருதுநகர் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் கார்த்திக் குமார், செல்வக்குமார்(36), பச்சைக் கனி, நாகலட்சுமி, திருமேனி(51), ராஜேஸ்வரி(32), ஜெயலட்சுமி, பாலாஜி உள்பட 12 பேர் காயமடைந்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.