தென்காசி,ஆக.4: குற்றாலத்தில் அருவிக்கரையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடந்தது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று நடந்தது. குற்றாலம் மெயினருவியில் வைத்து அகஸ்தியர், லோபமுத்ரா, சிவலிங்கம் மற்றும் அருவியில் உள்ள சிவலிங்கங்களுக்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. மேலும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம், ஆடைகள் வழங்கப்பட்டது. பூஜைகளை அகஸ்தியர் சத்சன்மார்க்க சபை காசிமேஜர்புரம் முத்துக்குமாரசுவாமி நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா, அம்பிகா, கொட்டாகுளம் பரமசிவன், அய்யா வழி கண்டமங்கலம் மோகன் உட்பட ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர்.
குற்றாலத்தில் சுமங்கலி பூஜை
previous post