கிருஷ்ணகிரி, ஜூலை 1: கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 441 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, மின்சார வசதி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மொத்தம் 441 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குறைதீர் கூட்டத்தில் 441 மனுக்கள் குவிந்தன
0
previous post