திருப்பூர், நவ. 26: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறபெற்ற 409 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அப்போது வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை. புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 409 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும், மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஹாராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார். தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.