திருவாரூர், ஜுலை 4: திருவாரூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவனங்களை வரன்முறைபடுத்துவதற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக அடுத்தாண்டு (2026) ஜுன் மாதம் 30ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.