உசிலம்பட்டி, செப். 9: உசிலம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதன் முடிவில், ஆண்கள் தனித்திறன் பிரிவில் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். அதேபோல் மாணவிகள் தனித்திறன் பிரிவில் உசிலம்பட்டி ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற ஆர்.சி சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை உடற்கல்வி சங்க மாவட்ட துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா பாராட்டி பரிசுக்கோப்பை வழங்கினார்.