க.பரமத்தி,செப்.11: அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த நாள்களில் இரு நாட்கள் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவில் புவனேஸ்வரன் 3000 மீட்டர் ஓட்ட போட்டியில் 2ம் இடமும், மாணவர் கமலேஷ் 3000 மீட்டர் ஓட்டப் பிரிவில் முதலிடம் பெற்றனர். மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3ம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவி ஹாஜி ஹலீமா 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குண்டு, ஈட்டி, தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 8ம் வகுப்பு மாணவி ஜீவிதா 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டியிலும் முதலிடம் பெற்றார்.
பத்தாம் வகுப்பு மாணவி பிரபஞ்சனி 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பட்டியில் 2ம் இடம் பெற்றார். 12ம் வகுப்பு மாணவி கஸ்தூரி 100 மீ.ஓட்ட போட்டியில் முதலிடமும், தட்டு, குண்டு எறிதலில் 2ம் இடமும் பெற்றார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இந்துஜா ஈட்டி எறிதலில் 2ம் இடம் பெற்றார். மேலும், மாணவிகள் பிரிவில் நீலம் தண்டுதல், உயரம் தாண்டுதல் கோலூன்றி தாண்டுதல், 4400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மாணவிகள் பிரிவில் ஒட்டுமொத்தமாக 56 புள்ளிகள் பெற்று குறுவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியனில் 2ம் இடம் பெற்றனர்.