முஷ்ணம், ஆக. 29: முஷ்ணத்தில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின போட்டிகள், 2023-24 கல்வியாண்டு குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற்றது. இதில் த.வீ.செ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முஷ்ணம் குறுவட்ட அளவிலான போட்டியில் 14, 17, 19 வயது பிரிவில் கலந்துகொண்டனர். வாலிபால், கைபந்து, கோ கோ, கபாடி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் த.வீ.செ மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஒட்டு மொத்த சம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். வெற்றிபெற்றவர்களை பாராட்டி பள்ளி தாளாளர் செந்தில்நாதன் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை பழமுதிர்சோலை, உதவி தலைமை ஆசிரியர் கமலகண்ணன், செல்லமுத்துகுமரன், பள்ளி நிர்வாகக்குழு தர்மலிங்கம், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கர், கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.