நெல்லை, ஆக. 6: குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக வட்டார அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. தென்காசி மாவட்ட அளவில் வட்டார விளையாட்டுப் போட்டிகள் பங்களா சுரண்டை, பேரன் புரூக் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் பல்வேறு வகையான போட்டிகளில் கலந்து கொண்டு அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட எறிபந்து போட்டியில், மாரிசிவராஜா, பெல்வின், கவின், கபில முகேஷ், மகேஷ் ராஜா, நவின் திவாகர், தர், பெரிய சுதன் பாலா, தரன், பாரதி குமார், நவீன் குமார் ஆகிய மாணவர்கள் அடங்கிய எஸ்எம்ஏ பள்ளி அணி வெற்றி பெற்று வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. 14 வயதிற்குட்பட்ட மேஜைப்பந்து போட்டியில் அகில்வின் இரண்டாம் இடமும், மேஜைப்பந்து இரட்டையர் போட்டியில் எட்வின் ஜெபகுமார், அகில்வின் இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் ராஜசேகரன், முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன், துணை முதல்வர் சரளா ராமசந்திரன், அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார், உதவி துணைமுதல்வர் பாகீரதி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.