திருப்பூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிகளுக்கான) தேர்வானது ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் மாதம் தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குரூப் 4 மாதிரி தேர்வு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 220 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு குரூப் 4 மாதிரி தேர்வு எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் செய்திருந்தார்.