தர்மபுரி, மே 27: தர்மபுரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு எழுதி வெற்றி பெற்ற வன காப்பாளர், வன காவலர் உள்ளிட்ட 95 பேருக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, வனத்துறை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் வனத்துறையில் காலியாக உள்ள வன காவலர் மற்றும் வன காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனகாப்பாளர் ஆகிய பணிகளுக்கு, கடந்த ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு நடந்தது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை தமிழ்நாடு தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு வன காப்பாளர் -35 பேர், வன காவலர் -56 பேர் மற்றும் வன காப்பாளர் ஓட்டுநர் 4 பேர் தேர்வு பெற்றனர். தொடர்ந்து நேற்று தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தர்மபுரி வனத்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் முன்னிலையில் நடந்தது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு 95 பேர் வந்திருந்தனர். இவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.