கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.1.5 லட்சத்தை கொள்ளை யடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த அய்யர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(41). நேற்றுமுன்தினம் இவர் குடும்பத்துடன் ஊத்துக்கோட்டை தாலுகா நடுக்குப்பம் கிராமத்தில் தன்னுடைய உறவினர். வீட்டுக்கு சென்றிருந்தார்.
வழக்கம் போல் திருவிழா முடிந்தவுடன் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கர், கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது நான்கு சவரன் நகை 1.5 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.