தொண்டி, மே 25: தொண்டி அருகே உள்ள சின்னத் தொண்டி கிராமத்தில் உள்ள பூர்ணாம்பிகா, புஸ்களாம்பிகா சமேத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் கிராம மக்கள் முன்னிலையில் கோயில் வளாகத்தில் முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.