கும்பகோணம், ஆக. 10: கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) கோகிலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பு: கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பொதுமக்களின் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனால், சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டதையடுத்து, பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (ஆகஸ்டு 10) புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.