Monday, March 4, 2024
Home » கும்பகோணம் மாநகராட்சி 19,20,21 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கும்பகோணம் மாநகராட்சி 19,20,21 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

by Ranjith

 

கும்பகோணம், டிச.27: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 19,20,21 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. சுமார் 329 மனுக்கள் பெறப்பட்டது. கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 3 வார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற ரீதியில், கடந்த 18ம் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 6ம் தேதி வரை தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி, கும்பகோணம் மாநகராட்சியின் 19,20,21 ஆகிய வார்டுகளுக்கான முகாம் திருவிடைமருதூர் ரோடு மகாராஜா மஹாலில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட சுமார் 329 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாநகர திமுக செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன், மேயர் சரவணன், துணை ஆணையர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் லோகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் ஆதிலட்சுமி (19), ஞானபண்டிதன் (20), சுமதி (21) மண்டல குழு தலைவர் மனோகரன், மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், மாநகர துணை செயலாளர் பிரியம் சசிதரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அனந்தராமன், பகுதி செயலாளர் கல்யாணசுந்தரம், மாநகர இலக்கிய அணி துணைத்தலைவர் குவைத் ஸ்ரீதர், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று அதற்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi