கும்பகோணம், ஆக. 7: கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பார்வையிட்டார். கும்பகோணத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கேண்டீன் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பார்வையிட்டார். தொடர்ந்து, நான்கு தளத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த், கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா, கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவசக்திவேல் கண்ணன், குற்றவியல் நிதித்துறை நடுவர் இளவரசி, உரிமையியல் நீதிபதி புவியரசு, கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி ரஞ்சிதா, வழக்கறிஞர் சங்க தலைவர் விவேகானந்தன், செயலாளர் செந்தில்ராஜன், பொருளாளர் ராஜா சீனிவாசன், துணை செயலாளர் பாலாஜி, முன்னாள் தலைவர் சங்கர், முன்னாள் துணைத்தலைவர்கள் வெங்கடேசன், மோகன்ராஜ், முன்னாள் செயலாளர்கள் பாலமுருகன், தரணிதரன், முன்னாள் துணைச்செயலாளர் அருள், அரசு வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.