கும்பகோணம், ஆக.18: கும்பகோணத்தில் பேருந்தில் பயணம் செய்த உணவக உழியர் உயிரிழந்ததால் மேற்கு போலீஸார் விசாரணை.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, கீழக்காட்டூரில் வசிப்பவர் ஜெயராமன் மகன் கார்த்திக்(24). இவர், தஞ்சாவூரில் ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு பேருந்தில் ஏறினார். பின்னர், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் வந்தும், அவர் இறங்காமல் உறக்கநிலையில் இருந்துள்ளார்.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அப்போது, பேருந்தில் பயணம் செய்த நர்ஸ் ஒருவர் அவரை பரிசோதனை செய்தபோது, மூச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திக் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.