கும்பகோணம், ஜுலை.2: கும்பகோணம் அருகே தென்சருக்கை திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, தென்சருக்கையில் உள்ள திரௌபதி ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், காவடி, அலகு காவடி பக்தர்கள் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவில் அருகே உள்ள திடலை வந்தடைந்தனர். தொடர்ந்து தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. அங்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.