கும்பகோணம்: கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 78 மாணவ, மாணவிகள், நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில் 138 மாணவ, மாணவிகள் என மொத்தம் 216 மாணவ, மாணவிகளுக்கு எம்எல்ஏ அன்பழகன் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், பகுதி கழக செயலாளர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன், முருகன், சந்தோஷ்குமார், சிவரஞ்சனி, வட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சிவசங்கர், தலைமையாசிரியர்கள் சரவணகுமாரி, மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.