கும்பகோணம், மே21:கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் மாநகராட்சிக்கு புகார் வந்தது.இதையடுத்து நேற்று மாநகர் நல அலுவலர் ஆடலரசி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் வடக்கு வீதி, கீழ வீதி, பெரிய கடை தெரு உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து அந்த கடையை பூட்டி சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அதிகளவு அபராதம் விதிப்பதுடன் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என கூறினர்.