கும்பகோணம், செப். 19: கும்பகோணத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாஜ தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் எம்.பி ராகுல்காந்தியை அவதூறாக பேசிய தமிழ்நாடு பாஜ தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜாவை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் மாநகர தலைவர் மிர்ஷாதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று எம்.பி ராகுல்காந்தி குறித்து அவதூறாக பேசிய பாஜ ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பதவி விலக வேண்டும், ராகுல்காந்தியை விமர்சனம் செய்ததை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.