கும்பகோணம், மே 29: கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி மதிப்பிலான அறிவுசார் மையம் மற்றும் நூலக கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தியடிகள் சாலையில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம்(2022-23)ன் கீழ் ரூ.2.62 கோடி மதிப்பிலான அறிவுசார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டித்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காந்தியடிகள் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.பி ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் காந்திராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொருளாளர் நடராஜன், மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர்கள் பிரியம் சசிதரன், சிவானந்தம், செந்தாமரை, பொருளாளர் ரவிச்சந்திரன், மண்டல குழு தலைவர்கள் மனோகரன், பாபு நரசிம்மன், பகுதி செயலாளர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, நிலைக்குழு தலைவர்கள் பார்த்திபன், சோடா.கிருஷ்ணமூர்த்தி, அனந்தராமன், முருகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாநகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.