திசையன்விளை,ஜூன் 28: திசையன்விளை கால்நடை மருந்தகம் சார்பில் குமாரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா பிரின்ஸ் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திசையன்விளை கால்நடை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் காலநடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடைகளுக்கு தடுப்பூசி, ஊட்டச்சத்து ஊசி கிருமி மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதில் கால்நடை வைத்திருக்கும் பொதுமக்கள் சுமார் 40க்கும் அதிகமானோர் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன் பெற்றனர். முகாமில் வார்டு உறுப்பினர் சந்தானம், ஊராட்சிச் செயலாளர் இசக்கியப்பன், நடமாடும் கால்நடை மருத்துவர் ஏஞ்சலின் சவுமியா, என்ஜிஓ அன்சியால் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளில் மிக சிறப்பாக வளர்க்கப்பட்ட கால்நடைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.