குலசேகரம்,ஜூலை 1: குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயசுதர்ஷன் தக்கலையில் உள்ள அண்ணா,எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவட்டாரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை, குலசேகரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட துணை செயலாளர் சலாம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன், மாவட்ட இணை செயலாளர் மேரி கமலாபாய், முன்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், வழக்கறிஞர் அணி செயலாளர் அருள் பிரகாஷ் சிங், மாவட்ட பொருளாளர் சில்வஸ்டர், திருவட்டார் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிமால், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மனோ, பத்மநாபபுரம் நகர செயலாளர் மணிகண்டன், திருவட்டார் மேற்கு ஒன்றிய இணை செயலாளர் ஜெயதாஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் செந்தமிழ்வாசன், குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அண்ணா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பிரதீப்குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெய சுதர்ஷன் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
0
previous post