நாகர்கோவில், ஜூன் 19: விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் கால்பந்து போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் குமரி மாவட்ட அணி வீரர்கள் தேர்வு வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.1.2010க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 21ம் தேதி மாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டும். என மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட கால்பந்து வீரர்கள் தேர்வு 21ம் தேதி நடக்கிறது
0
previous post