புதுக்கடை, ஆக.27: மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் குமார். பிரபல தொழிலதிபரான இவர் குமரி மாவட்ட ஊர்காவல் படையின் வட்டார தளபதியாக கடந்த 2007-ம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். பல ஆண்டுகள் காவல் துறை, தேர்தல் பணி, போக்குவரத்து, பேரிடர் கால பணிகளில் சிறப்பாக செயல்பட்டு ஊர்காவல் படைக்கு சிறப்பு சேர்த்தார். கடந்த 2015 முதல் நெல்லை சரக உதவி மண்டல தளபதியாக உள்ளார். இவரது சேவையை பாராட்டி இந்திய குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வைத்து பதக்கம் வழங்கினார்.