நாகர்கோவில் ஆக.3: விஜய் வசந்த் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். காமராஜர் வழி நடந்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கி, தமிழை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு இந்த விருது வழங்கியிருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக குமரி மக்களுக்கும் இது பெருமை சேர்ப்பதாகும். காமராஜர் மறைவிற்கு பின் அவர் வழியில் நாகர்கோவில் எம்.பி.யாவும், 4 முறை எம்.எல்.ஏ.வாகவும் மக்கள் சேவை செய்தவர் குமரி அனந்தன்.குமரி அனந்தனின் மேடை பேச்சுக்களும், அவர் எழுதிய புத்தகங்களும் அவரது தமிழ் புலமைக்கு சான்று. இத்தகைய தலைவருக்கு தகைசால் விருதினை அரசு வழங்கியிருப்பது மிக பொருத்தமானது. அவரை வாழ்த்த வயதில்லை. ஆகையால் அவரது பணிகளுக்கு முன் வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குமரி அனந்தனுக்கு தகைசால் விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி விஜய் வசந்த் எம்.பி. அறிக்கை
previous post