நாகர்கோவில், ஜூன் 11: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (35 கிலோ வரை) பார்சல் தபால் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வசதி, இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. இச்சேவை தற்போது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை ஆகிய தலைமை அஞ்சலகம், கன்னியாகுமரி, நெய்யூர், குளச்சல், அருமனை, மார்த்தாண்டம், குழித்துறை ஆகிய துணை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களை நம்பிக்கையுடன் சிறந்த தரத்தில் குறைந்த செலவில் பேக் செய்து, இந்தியாவின் எந்த இடத்திற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப முடியும். அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகி பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குமரி அஞ்சலகங்களில் 35 கிலோ வரையிலான பொருட்கள் அனுப்பலாம் அதிகாரி தகவல்
0