மார்த்தாண்டம் ஆக.20:குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் பாரதீய முன்னாள் படைவீரர் நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. தலைவர் ஏசு ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வழக்கறிஞர் எலிசா தேசியக் கொடியேற்றினார். துணைத்தலைவர் தங்கராஜன், துணைச் செயலாளர் ரபேல், பொருளாளர் சுஜாதா, ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் நாயர், சட்ட ஆலோசகர் வக்கீல் அருள், மகளிர் தலைவி ரோஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னாள் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.