திருப்பரங்குன்றம், செப். 23: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வைகாசி விசாகம், கந்த ஷஷ்டி, தைப்பூசம், பங்குனி தேரோட்டம் ஆகிய முக்கிய விழாக்காலங்களில் மதுரை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்தநிலையில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கோயில் வாசல் முன்பு 24 மணிநேரமும் செயல்படும் புறக்காவல் நிலையம் மற்றும் காவல் உதவி மையத்தை நேற்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநதன் திறந்து வைத்தார். உடன் மாநகர தெற்கு துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனர் குருசாமி, திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.