ஊட்டி, ஜூலை 16: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூர் நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னூர் நகர திமுக சார்பில் பெட்போர்டு பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, குன்னூர் நகரமன்ற தலைவர் ஷீலாகேத்ரின், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில், நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத் ராவ், பழனிசாமி, மணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் ஜாகீர்உசேன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சிக்கந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், குமரேசன், வசந்தி, ஜெகநாதன், செல்வி, பாக்கியவதி, சித்ரா, சமீனா, நிர்வாகிகள் அப்துல்காதர், மது, கோபு, சகாயநாதன், இளைஞர் அணி பிரவீன், அபி, கிப்சன், ஜெயராம் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.