ஊட்டி, ஜூன் 20: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21ம் தேதி) குன்னூர் மின் விநியோகம் இருக்காது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் கூறியிருப்பதாவது: ஜெகதளா துணை மின் நிலையத்தில் நாளை (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்கது. இதன்படி ஜெகதளா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி மற்றும் மவுண்ட் பிளாசண்ட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.