குன்னூர், செப்.2: நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர திமுக மற்றும் வெலிங்டன் கண்டோன்மெண்ட் நகரிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் குன்னூரில் நகர அவை தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்றது. குன்னூர் நகர செயலாளர் ராமசாமி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக், தேர்தல் பணி செயலாளர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் சிறப்புற நடத்துவது, 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் குன்னூர் நகரமன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார்,
தலைமை கழக சொற்பொழிவாளர்கள் முபாரக், ஜாகீர் உசேன், குன்னூர் நகராட்சி தலைவர் சுசீலா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், வினோத்குமார் ஆகியோர் மற்றும் குன்னூர் நகர, கண்டோன்மெண்ட் நகரிய நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழகங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கண்டோன்மெண்ட் நகரிய செயலாளர் மார்ட்டின் நன்றி கூறினார்.