Thursday, February 29, 2024
Home » குன்னம் தொகுதியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வினா-விடைகள் புத்தகம் சொந்த நிதியில் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

குன்னம் தொகுதியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வினா-விடைகள் புத்தகம் சொந்த நிதியில் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

by Francis

 

பாடாலூர், பிப். 5: குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முக்கிய வினா-விடைகள் அடங்கிய புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சொந்த செலவில் வழங்கினார். குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் 8,612 மாணவ, மாணவிகளுக்கு ”தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான மிக முக்கிய வினா விடைகள் அடங்கிய புத்தகங்களை அமைச்சர் சிவசங்கர் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

இதன்படி 10ம் வகுப்பு படிக்கும் 306 மாணவ,மாணவிகள், 11ம் வகுப்பு மாணவர்கள் 352 பேர், 12 ம் வகுப்பு பயிலும் 274 மாணவ,மாணவிகள் என மொத்தம் 932 மாணவ,மாணவிகளுக்கு இந்த புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்தப் புத்தகங்கள் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மற்றும் அரசுப் பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த அரியலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப்பின் மாணவ மாணவிகள் எளிதில் படிக்கும் வகையில், தேர்வில் கட்டாயம் கேட்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வினாக்கள் அதற்கான விடைகளுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாக்களும், விடைகளும் மாணவர்களுக்கு புரியும் வகையிலும் எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

10 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi