குன்னம், ஆக. 31: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு. ஆடுதுறை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும், மஹா கணபதி , சிவசக்தி விநாயகர், கோயில் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 29ம் தேதி காலை மகா கணபதி, லட்சுமி, ஹோமமும், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகனமும் முதல் கால பூஜையும் அங்குரார்பனமும், ரக்ஷாபந்தனம், யாகசாலை இரவு பூர்ணாஹூதி, தீபாராதனையும், காலை நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, இரண்டாம் கால யாக பூஜை, தீபாரதனை நடைபெற்றது.
30ம் தேதி மூன்றாம் கால யாக பூஜையும், நாடி சந்தானம், திரவியகோமமும், 7 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனையும் பின்னர் யாத்ராதானமும், கடங்கள் புறப்பாடும் நடைப்பெற்றது. பின்னர், 7.30 மணி அளவில் மஹா கணபதி, சிவசக்தி விநாயகர் கோயிலின் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர், உற்சவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
கும்பாபிஷேக பூஜைகளை ஹரிகர கிருஷ்ண சிவம் குழுவினர் செய்து இருந்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும், வாண வேடிக்கையும் நடைப்பெற்றது. மங்களமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். கும்பாபிஷேக விழாக்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் குன்னம் வட்டம் நமையூர் – நரி ஓடை கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.