மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம் தென்காசி, மே 24: குத்துக்கல்வலசையில் வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. அப்போது அண்ணா நகர் 9வது தெருவில் பழமைவாய்ந்த பன்னீர் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரம் சாய்ந்து விழும்போது அருகில் இருந்த வேப்ப மரத்திலும் சாய்ந்து மின் கம்பியில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு மின் கம்பம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து சென்ற மின்வாரிய பணியாளர்கள் மின் விநியோகத்தை நிறுத்தினர். தொடர்ந்து மின்வாரிய பணியாளர்களின் போர்க்கால நடவடிக்கையால் முறிந்த மின்கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் நடப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.
குத்துக்கல்வலைசையில் பலத்த காற்று
0