குத்தாலம், ஜுன் 28: குத்தாலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2024-2025 ஆண்டிற்கான நிதியிலிருந்து டெஸ்க் மற்றும் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் அம்பிகா, உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் சுந்தர்ராமன் வரவேற்பு உரை ஆற்றினார்.
மாணவிகள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள டெஸ்க் மற்றும் பெஞ்ச்களை எம்பி சுதா மாணவிகளின் பயன்பாட்டிற்காக பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில், பொருளாளர் கணேசன் மூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதாமகாலிங்கம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் நிரஞ்சனி தேவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.