நெல்லை, மே 9: முன்னீர்பள்ளம் அருகே கொத்தன் குளத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஆனந்தராஜ் (28). கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக இவரை கைதுசெய்த முன்னீர்பள்ளம் போலீசார் பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை எஸ்.பி. சிலம்பரசன், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனிடம் பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர், இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ், பாளை மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.