ஆறுமுகநேரி, ஆக. 4: காயல்பட்டினம் பேயன்விளை ஜங்ஷன் பகுதியில் கடந்த ஜூலை 6ம்தேதி வந்துகொண்டிருந்த காயல்பட்டினம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் (30) என்பவரை சிலர் மறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்சென்றனர். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீசார், காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் (எ) சிலிண்டர் (36) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை. சிறையில் அடைக்கப்பட்டார்.