நெல்லை, ஜூன் 27: நெல் லை தச்சநல்லூர் தேனீர்குளம் தெற்கு நியூ காலனியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நம்பிராஜன்(32). இவர் மீது கொலை முயற்சி உட்பட வழக்குகள் உள்ளன. இவரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
பாளை திம்மராஜபுரம் வெங்கடேஸ்வரா தெருவைச் சேர்ந்த ராமர் ஆதிநாராயணன்(23). இவர் மீது கொலை முயற்சி உட்பட வழக்குகள் உள்ளன. இவரை பாளை போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டி போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்கு மண்டலம் பிரசன்னகுமார், கிழக்கு மண்டலம் வினோத் சாந்தாராம், இன்ஸ்பெக்டர்கள் தச்சநல்லூர் மகேஷ்குமார், பாளை காசிப்பாண்டியன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணியிடம் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நம்பிராஜன், ஆதிநாராயணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.