மதுரை, செப். 6: மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி அனார்கலி(55). இவர் மதுரை நகரில் ஏழைப் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி போலீசார் அவரை கைது செய்வதும், பின்னர் ஜாமீனில் வந்த பிறகு மீண்டும் அதே தொழிலை அவர் அச்சமின்றி செய்வதும் தொடர்கதையாகி வந்தது.
இவரது சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், அவரை போலீசார் கைது செய்து மதுரை பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.