காரிமங்கலம், ஆக.29: காரிமங்கலம் சுற்றுவட்டாரம் மற்றும் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில், நேற்று உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாட்லாம்பட்டி, பொன்னேரி பகுதியில் உள்ள 2 கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு கடைகளில் இருந்து 28 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி (49), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த டுபிட்க் (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
குட்கா விற்ற 2 பேர் கைது
previous post