கோவை, மே 24: கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில்,குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று துடியலூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். தடைசெய்யப்பட்ட குட்காவை பதுக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் குட்கா பதுக்கி விற்ற கருடம்பாளையம் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த காங்கயன்(44) என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்த 12 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட காங்கயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.